Sunday 18 January 2015

அமெரிக்க துணை அதிபர் வீடு அருகே துப்பாக்கி சூடு ஒருவர் கைது

நியூயார்க், 

அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன். இவரது வீடு டெலாவேர் நகரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இவரது வீட்டின் அருகேயுள்ள கிரீன்வில்லி ரோட்டில் 300 அடி தூரத்தில்  துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது ஒரு காரில் அ ந்க்கிருந்து விரைந்து சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதுகப்பு படையினர்

சோதனை சாவடிக்கு தகவல் தெரி வித்த போலீசார் அந்த காரையும், துப்பாக்கியால் சுட்ட நபரையும் கைது  செய்தனர். ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. எதற்காக அவர் துப்பாக்கி யால் சுட்டார் எனவும் தெரியவில்லை. இச்சம்பவம் நடைபெற்ற போது துணை அதிபர் ஜோபிடன் அவரது மனைவி ஜில் ஆகியோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு வெள்ளை மாளிகைக்குள் கத்தியுடன் புகுந்த மர்ம மனிதனை பாதுகாவலர்கள் கைது செய்தனர். அதன் பிறகு தற்போது துணை அதிபர் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive