Sunday 18 January 2015

ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தாவூத் இப்ராகீம் காராச்சிக்கு திரும்பியதாக தகவல்

கராச்சி,

ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் வசித்து வந்த மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீம்  பாதுகாப்பு காரணங்களுக்காக மீண்டும் கராச்சி திரும்பியுள்ளதாக புதிய உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கான் - பாகிஸ்தான் எல்லையில் தலீபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் அப்பகுதி தாவூத் இப்ராகீமும்க்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்காது என்று கருதிய பாகிஸ்தான் உளவு அமைப்பான  ஐஎஸ்.ஐ, இதன் காரணமாக தாவூத் இப்ராகீமை காரச்சிக்கு செல்ல அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும், தனது குடும்பத்துடன் சவுதி அரேபியாவுக்கு செல்ல திட்டமிட்ட தாவூத்  இப்ராகீம்  இதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்து தருமாறு பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கு இடையே வளர்ந்து வரும் நல்லுறவால்,  இது தங்களுக்கு எதிராக அமைந்து விடும் என  ஐ.எஸ்.ஐ அமைப்பு பயப்படுவதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்த வாரத்தில், சோடா ஷாகில் மற்றும் அனிஷ் இப்ராஹிம் தொலைபேசி உரையடலை இடைமறித்து கேட்டதில் அவர்கள் இருவரும் கராச்சியில் பதுங்கியிருப்பதை இந்திய உளவு அமைப்பு கண்டறிந்தது. அதேபோல் தாவூத் இப்ராகீம் பாகிஸ்தானில் ரியல் எஸ்டேட் துறையில் தனகென  தனி ராஜாங்கம் நடத்தி வருவது இந்த மாத தொடக்கத்தில் வெளியான தொலைபேசி உரையாடல் மூலம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. 

மும்பையில் நிழல் உலக தாதாவாக திகழ்ந்த தாவூத் இப்ராகிம்  20 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் மிகப் பெரிய குண்டு வெடிப்புகளை நடத்தி விட்டு பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிவிட்டார். பாகிஸ்தான் அரசும், ராணுவமும்  தாவூத் அந்த நாட்டில் பதுங்கி இருப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்துள்ளது.  தாவூத் இப்ராகீமை  ஒப்படைக்க இந்தியா பல தடவை வேண்டுகோள் விடுத்த போதும், தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive