Tuesday 20 January 2015

அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள்: ராஜபக்சே கதறல்

அரசியல் ரீதியாக என்னை பழி வாங்காதீர்கள்: ராஜபக்சே கதறல்கொழும்பு, ஜன.20-

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் வீட்டில் இன்று போலீசார் அதிரடி ‘ரெய்டு’ நடத்திய நிலையில் அரசியல் ரீதியாக தன்னை பழி வாங்குவதை நிறுத்திக்கொள்ளுமாறு ராஜபக்சே கூறியுள்ளார்.

அலரி மாளிகை எனப்படும் ராஜபக்சே தங்கியிருந்த அதிபர் மாளிகையின் ரகசிய அறை ஒன்றில் இருந்த ரூ.1,500 கோடி பணத்தை நேற்று அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதன்மூலம் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது, அதிகாரத்தை பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இந்த பணத்தை ராஜபக்சே குடும்பத்தினர் மறந்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது.

இதற்கிடையே ராஜபக்சே குடும்பத்தினர் அரசின் பாதுகாப்பு நிதியத்தில் இருந்து பெருமளவு பணத்தை எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நிதியத்தின் தெப்ரபேன் கிளையில் இருந்த ரூ.20 ஆயிரம் கோடி பணத்தில், தற்போது வெறும் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே இருப்பதாக தெரிய வந்து உள்ளது.

இதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் சுமார் ரூ.13 ஆயிரம் கோடியை அபகரித்து இருப்பது தெரிய வந்து உள்ளது என்றும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை மந்திரியாக இருந்த ராஜபக்சே எவ்வித ஆவணமும் இன்றி இந்த பணத்தை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஹம்பன்டோட்டா மாவட்டத்தில் உள்ள ராஜபக்சேவின் சொந்த கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்பாகினி காரை ராஜபக்சே குடும்பத்தினர் இங்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று கண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜபக்சே, 'எங்கள் குடும்பம் 1931-ம் ஆண்டிலிருந்து அரசியலில் இருந்து வருகின்றது. ஆனால், எங்கள் வீடுகளில் எப்போதும் சோதனை நடத்தப்பட்டதில்லை. இந்த பழிவாங்கும் போக்கை அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive