Tuesday 20 January 2015

பிரதமர், முதல்-மந்திரி பெயர்களை தேர்தலுக்கு முன்னதாகவே அறிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்: உமர் அப்துல்லா

பிரதமர், முதல்-மந்திரி பெயர்களை தேர்தலுக்கு முன்னதாகவே அறிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்: உமர் அப்துல்லாஸ்ரீநகர், ஜன.20- 

பிரதமர் மற்றும் முதல்-மந்திரிகளை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நியமிக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமர் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரி வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக தனது கருத்தை 'டுவிட்டர்' மூலம் தெரிவித்துள்ள அவர், மக்கள் வாக்களித்த பின்னர் தங்களை ஆளப்போவது யார்? என்பதை தெரிந்து கொள்வதற்கு பதிலாக வேட்பாளர்களை நிறுத்தும் போதே அவர்களில் ஆட்சிக்கு தலைமை ஏற்கப்போவது யார்? என்பதை வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

இதேபோல், வேட்பாளர்களுக்கிடையே ஒன்றிரண்டு நேரடி விவாதங்களை நடத்துவதும் நல்லது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive