Monday 19 January 2015

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக ஸ்டீபன்ஸை வீழ்த்தினார் அசரென்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது ஆண்டாக அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸை விக்டோரியா அசரென்கா வீழ்த்தினார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று   நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இரண்டு முறை கோப்பையை வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை பெலரசின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கை ஸ்லொவேன் ஸ்டீபன்ஸை எதிர்கொண்டார். காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த விக்டோரியா அசரென்கா மீண்டும் களமிறங்கினார். 

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அசரென்கா,  6-3, 6-2  என்ற நேர் செட் கணக்கில் ஸ்டீபன்ஸை வீழ்த்தி இரண்டாவது சுற்று ஆட்டத்திற்கு முன்னேறினார்.

காயம் காரணமாக போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் இருந்த அசரென்கா உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 44 வது இடத்திற்கு சென்றார். அமெரிக்காவின் இளம் வீராங்கனை ஸ்டீபன்ஸின் ஆஸ்திரேலிய ஓபன் பட்ட கனவுக்கு மூன்றாவது வருடமாக அசரென்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ் தோல்வி அடைந்தார். கடந்த ஆண்டும் அசரென்காவிடம் 4 வது சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் அவருடைய ஆஸ்திரேலிய ஓபன் ஆசைக்கு அசரென்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

விக்டோரியா அசரென்கா கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை தன்வசப்படுத்தினார். கடந்த ஆண்டு காலிறுதி ஆட்டத்தில் வெளியேறினார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை சீன வீராங்கனை லீ நா வென்றார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive