Sunday 18 January 2015

இந்து பெற்றோர்ர்கள் 10 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் சாமியாரின் சர்ச்சை பேச்சு

லக்னோ, 

இந்து   பெண்கள்  ஒவ்வொருவரும் தலா 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் மற்றும்  
விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி ப்ராச்சிஆகியோர் பேசினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஸ்ரீ வாசுதேவானந்த் சரஸ்வதி சாமியார் ஒருவர் இந்து பெண்கள் தலா 10 குழந்தைகள் பெற வேண்டும்  என தெரி வித்துள்ளார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிகா ஆசிரமத்தின் சங்கராச்சாரியார் ஆவார்.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் மேகமேளா நிகழ்ச்சி  நடந்தது. அதில் கலந்து கொண்டு சங்கராச்சாரியார் ஸ்ரீவாசுதேவானந்த் சரஸ்வதி பேசினார். அப்போது இந்துக்கள் ஒற்றுமையால் தற்போது நரேந்திர மோடி பிரதமர் ஆகி உள்ளார்.இந்த நிலை தொடர வேண்டும். இந்துக்கள் 4 குழந்தை பெற்றுகொள்ள வேண்டும் என்பது தவறு
அவர்கள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தயாராக குறைந்தது 10 குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என நான் நினைக்கிகிறேன். 

 கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு சென்றவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இங்கிருந்து தான் அவர்கள் மதங்கள் மாறினார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும். அவர்கள் மதம் மாறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கையோ, தடை செய்வதோ கூடாது என்று அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive