Monday 19 January 2015

பிரான்சு பத்திரிகைக்கு எதிர்ப்பு: நைஜர் நாட்டில் கலவரம்; 10 பேர் பலி

நியாமி, 

பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீசில் கடந்த 7-ந்தேதி சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களை பிரசுரித்த ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் 12 பேரை கொன்று குவித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த பத்திரிகை பிரச்சினைக்குரிய கேலிச்சித்திரங்களை பிரசுரித்தது.

இதனை கண்டித்து ஆப்பிரிக்க நாடான நைஜரில் கலவரம் வெடித்தது. கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் நியாமியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்றனர். தேவாலயங்கள் மற்றும் மதுபான பார்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய இளைஞர்கள், ஒரு கட்டத்தில் தீ வைத்தும் எரித்தனர். மேலும், பிரான்சு நாட்டை சேர்ந்தவர்களின் வர்த்தக நிறுவனங்களையும் அடித்து நொறுக்கியதோடு, அவர்களின் வீடுகளையும் சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.

மேலும் போலீஸ் நிலையம் தாக்கப்பட்டதோடு, 2 போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். 2-வது நாளாக நேற்று முன்தினமும் கலவரம் நீடித்தது. இந்த வன்முறையில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த நைஜர் அதிபர் மஹமாதோவ் இஸ்சவ்பவ், விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive