Wednesday 21 January 2015

பன்றிகாய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு, மத்திய அரசின் உதவியை நாடியது தெலுங்கானா அரசு

ஐதராபாத்,

தெலுங்கானாவில் இந்தவருடத்தில் இதுவரையில் 11 பேர் பன்றிகாய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். உயிர்கொல்லி வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. 

பன்றிக்காய்ச்சல் என அழைக்கப்படும் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் நாடுமுழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பன்றிகாய்ச்சல் பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் இதில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநிலத்தில் காய்ச்சலுக்கு இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஓஸ்மானியா பொதுமருத்துவமனையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே சந்திரசேகர ராவ், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினார் என்று முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரிடம் பேசிய சந்திரசேகர ராவ், மாநிலத்தில் மத்திய குழுவை அமர்த்தவும், மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்கவும் கேட்டுக் கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் கோரிக்கைக்கு சாதகமாக பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை மீது ராவ் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகர ராவ், மத்திய சுகாதாரத் துறை மந்திரியிடம் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவல் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில தலைமை செயலாளர் ராஜீவ் சர்மாவிடம் சந்திரசேகர ராவ் அறிக்கை கேட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். மக்கள் குளிர்காலத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் 
காற்று மற்றொரு 20 நாட்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று ராவ் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதில் செலவுபற்றி கவலைப்படாமல், பன்றிக் காய்ச்சல் தடுப்பு தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மேற்கொள்ள தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். பன்றிகாய்ச்சலுக்கு எதிராக போராட மாநிலஅரசை தயார்படுத்த முதல்-முந்திரி முடிவு செய்துள்ளார். இதற்கிடையே மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஜே.பி. நட்டாவிடம் பன்றிகாய்ச்சல் வைரஸ் பரவல் தொடர்பாக பேசியுள்ள்ளார். பண்டாரு தத்தாத்ரேயாவும், மாநிலத்தில் மத்திய குழுவை அமர்த்தவும், மருத்துவ உதவிகளை வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய மந்திரி விரைவில் மாநிலத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive