Wednesday 21 January 2015

கின்னஸ் சாதனை படைத்த ‘ஜன்தன் யோஜனா’ திட்டம் நாடு முழுவதிலும் 11½ கோடி வங்கி கணக்குகள் தொடக்கம்




புதுடெல்லி,
மத்திய அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் பயனை பெறுவதற்காக கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ என்னும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி வருகிற 26–ந்தேதிக்குள் 7½ கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பின்னர் அது 10 கோடியாக உயர்த்தப்பட்டது.
இது குறித்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறுகையில், “நாடு முழுவதிலும் பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை 11½ கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாட்டில் வங்கிக் கணக்கு இல்லாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டார்.
மத்திய நிதித்துறைச் செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறும்போது, ‘இந்திய அரசின் நிதிச் சேவைத் துறை, ஜன்தன் யோஜனா திட்டத்தில் 2014–ம் ஆண்டு ஆகஸ்டு 23–ந்தேதி முதல் 29–ந்தேதிக்கு உட்பட்ட ஒரு வார காலத்துக்குள் மட்டும் 1 கோடியே 80 லட்சத்து 96 ஆயிரத்து 130 வங்கிக் கணக்குகளை தொடங்கி சாதனை படைத்து இருப்பதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறது‘ என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive