Wednesday 21 January 2015

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ல் தொடங்குகிறது: 28 -ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்



புதுடெல்லி,

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி மே 8 -ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பிப்ரவரி 28 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  அதற்கு முன் ரயில்வே பட்ஜெட் 26-ம் தேதியும் அதை தொடர்ந்து 27 -ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று கூடிய பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தின் முடிவில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான கால அட்டவணையை ஜனாதிபதியின்  ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.

இரண்டு பகுதிகளாக நடைபெறும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 20-ம் தேதி வரை  நடைபெறுகிறது. பின்னர் ஒருமாத இடைவெளிக்கு பிறகு ஏப்ரல் 20-ம் தேதி மீண்டும் கூடும் கூட்டதொடர் மே 8 ஆம் தேதி முடிவடையும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த ஒருமாதகாலத்தை பல்வேறு அமைச்சகங்களின் பட்ஜெட் திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய பாராளுமன்றகுழு பயன்படுத்துகிறது. 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரையோடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் இரு அவை உறுப்பினர்களும் ஒன்றாக கலந்து கொள்கின்றனர்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிப்ரவரி 24, 25 -ம் தேதிகளில் விவாதம் நடைபெறுகிறது. ஒருவேளை இந்த இரண்டு நாட்களில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையென்றால் பின்னர் இது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

கடந்த காலங்களிலும் சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் ஒருவர் சனிக்கிழமை பட்ஜெட்  தாக்கல் செய்யப்படுவது குறித்து தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரின் போது அண்மையில் ஜனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்ட ஆறு அவசர சட்டங்களை நிறைவேற்ற அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்று தெரிகிறது. 

பாராளுமன்ற கமிட்டி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு, காங்கிரஸ் தனது ஆட்சி காலத்தில் நிறைவேற்றிய பல்வேறு அவசர சட்டங்களை நாங்கள் பட்டியலிட்டு காட்டுவோம் என்று தெரிவித்துள்ளர். மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பதால்  எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive