Wednesday 21 January 2015

டெல்லி தேர்தலை முன்னிட்டு உள்நாட்டு பாதுகாப்பு குறித்த முதல் மந்திரிகளின் மாநாடு தள்ளிவைப்பு

புதுடெல்லி,

உள்நாட்டு பாதுகாப்பு  குறித்து ஆலோசனை செய்வதற்காக நடைபெற இருந்த மாநில முதல் மந்திரிகள் மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நக்சலைட்டு தீவிரவாதம் குறித்து  ஆலோசனை செய்வதற்காக மாநில முதல் மந்திரிகள் மாநாடு வரும் ஜனவரி 31 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் லெப்ட்டினட் கவர்னர்கள் கலந்து கொள்வார்கள். பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட அனைத்து விவகாரங்களும் கலந்தாலோசிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் பாதுகாப்பு குறித்த முதல் மாநாடு இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  

இந்த நிலையில், 31 ஆம் தேதி நடைபெற இருந்த மாநில முதல் மந்திரிகளின் மாநாடு  தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான முறையான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்த தகவலை உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

” ஜனவரி 31-,ம் தேதி நடைபெற இருந்த   மாநில முதல் மந்திரிகளின் மாநாடு  தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.  மாநாடு தள்ளிவைக்கப்படுவதற்கான காரணம் குறித்து முறையான அறிவிப்பு எதையும் அவர் வெளியிடவில்லை. 

இருப்பினும், வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலால் மாநாடுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதில் இருக்கும் சிரமம் மற்றும் மாநாடு நடைபெறும் 31 ஆம் தேதி பிரதமர் பங்கேற்க முடியாத சூழல் காரணமாக இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive