Wednesday 21 January 2015

கிரண் பேடியை பாரதீய ஜனதாவில் பார்ப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது-ஆத்மி கட்சி

புதுடெல்லி,

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கிரண் பேடி, மோடியின் காப்பீட்டு பாலிசி, பேடியை பாரதீய ஜனதாவில் பார்ப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் கூறியுள்ளார். 

தனியார் செய்தி தொலைகாட்சி ஒன்றுக்கு  பேட்டியளித்த ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான  யோகேந்திர யாதவ்  கூறியதாவது:-

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரே படை தளபதி கிரண் பேடியையும், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர் ஷாஜியா இல்மி ஆகியோரை பாரதீய ஜனதா கட்சியில் பார்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

இன்றைய நிலவரப்படி பாரதீய ஜனதாவுக்கு பணம், கார்ப்பரேட் பவர் மற்றும் மீடியா பலம் என அனைத்தும் உள்ளது. ஜனவரி 10-ம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடியின் பொது கூட்டம் தோல்வியில் முடிந்தது. அவர்களால் கூட்டத்திற்கு 25 ஆயிரம் மக்களை கூட கூட்ட முடியவில்லை. எனவே தற்போதைய டெல்லி தலைமையில், அங்கு வெற்றிபெற முடியாது என்று மோடி முடிவு செய்துவிட்டார்.

கிரண் பேடி ஒன்றுமே இல்லை, ஆனால் அவர் மோடியின் காப்பீட்டு பாலிசி. டெல்லியில் பாரதீய ஜனதா தோல்வியை தழுவினால் கிரண்பேடி மீது குறை கூறப்படும். கிரண் பேடியுடன் இணைந்து பணியாற்ற பாரதீய ஜனதாவிற்கு ஒன்றும் கட்டாயம் இல்லை.

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கிரண் பேடி உண்மையாகவே நினைத்திருந்தால், பிறகு ஏன் அவர் தேர்தல் நடைபெற 20 நாட்களே உள்ள நிலையில் பாரதீய ஜனதாவில் சேரவேண்டும்?.
ஒவ்வொரு முறையும் ஷாஜியா இல்மியை பாரதீய ஜனதா தொண்டர்களுக்கு இடையே பார்க்கையில் நான் மிகவும் அதிர்ச்சி அடைகிறேன். அவர் எப்போதும் பெண்களுக்கு ஆதரவானவர். அவர் முற்றிலும் மதசார்பற்றவர். அவர் தற்போது அமித் ஷாவுடன் ஓரே மேடையில் காட்சி அளிக்கிறார். இது மிகவும் வருத்ததை அளிக்கிறது. என்று கூறினார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive