Wednesday 21 January 2015

மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை, அரசியலாக்க வேண்டாம் - காங்கிரஸ்

புதுடெல்லி,

மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதை அரசியலாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார்.
 
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், தனது பதவிக்காலத்தில், நிலக்கரி இலாகாவையும் சில ஆண்டுகள் கவனித்து வந்ததால், நிலக்கரி சுரங்க ஊழலில் அவர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், ஊழலில் அவருக்கு தொடர்பு இல்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பாரத் பரஷார் ஏற்கவில்லை. ஊழலின் பல்வேறு அம்சங்கள் குறித்து முதலில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கடந்த மாதம் 16–ந் தேதி அவர் உத்தரவிட்டார்.

அதன்படி, மன்மோகன்சிங்கிடம் அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியதாக டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த 2005–ம் ஆண்டு, ஹிண்டால்கோ என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கியதில் நடந்த ஊழல் தொடர்பாக இவ்விசாரணை நடந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் மன்மோகன் சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதை அரசியலாக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். "இது ஒரு சட்ட செயல் முறையானது, இவ்விவகாரத்தை அரசியலாக்குவது முற்றிலும் தேவையில்லாதது மற்றும் முட்டாள்தனமானது. பொறுப்பான குடிமகன் போன்று அனைத்து கேள்விகளுக்கும் பதில்அளித்தது பாராட்டப்பட வேண்டும்." என்று அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். முன்னதாக பாரதீய ஜனதா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது சி.பி.ஐ. நெருக்கடியில் இருந்தது என்றும் அதனால் அவரிடம் விசாரிக்கப்படவில்லை என்று கூறியது.

இரண்டு நாட்களுக்கு முன்பு மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive