Wednesday 21 January 2015

அரசியல் அழுக்கில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன்: கிரண் பேடிக்கு அன்னா ஹசாரே பதில்



மும்பை,
அரசியல் அழுக்கில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன் என்று கிரண் பேடிக்கு அன்னா ஹசாரே பதிலளித்தார். 

ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் காந்தியவாதி அன்னா ஹசாரேவுடன் இணைந்து செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதேபோல அன்னா ஹசாரேவுடன் இணைந்து பணியாற்றிய மற்றொருவர், இந்தியாவின் முதல் பெண்  ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண் பேடி ஆவார். இவர் சமீபத்தில் பா.ஜனதாவின் இணைந்து, டெல்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் முதல்-மந்திரி வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். 

அரசியலில் சேர இருக்கும் முடிவு குறித்து சமீபத்தில் அன்னா ஹசாரேயை நேரில் சந்தித்து பேசியதாவும், பா.ஜனதாவில் இணைவதற்கு முன்பு அவரை போனில் தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லை என்றும் கிரண் பேடி கூறியிருந்தார். 

இது தொடர்பாக மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரேயை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர் பதிலளித்து கூறியதாவது:கிரண் பேடியின் போன் அழைப்பை ஏற்று நான் பேசவில்லை என்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்பட்டு உள்ளது. நான் அரசியல் அழுக்கில் இருந்து விலகி இருக்கவே விரும்புகிறேன். இந்த அரசியல் அழுக்கில் நடைபோட விரும்பவில்லை. கிரண் பேடி பா.ஜனதாவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவிக்கவும் விரும்பவில்லை. ஜனலோக்பால் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை டெல்லி சட்டசபை தேர்தலுக்கு பிறகு தெரிவிப்பேன். இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive