Monday 19 January 2015

ஒபாமா வருகை: சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு படை குவிப்பு

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீரின் சர்வதேச எல்லைப்பகுதியில் எல்லைப்பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.கூடுதலாக 1200 பாதுகாப்பு படையினர் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச எல்லைப்பகுதியில் சில ஊடுருவல் முயற்சிகளை பாதுகாப்பு படையினர் தடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லஷ்கர் -இ தொய்பா அமைப்பினர் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதால் 10-12 கம்பெனி எல்லைப்பாதுகாப்பு படையினர் எல்லையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு  எல்லைப்பாதுகாப்பு படை கம்பெனியும் 100 க்கும் மேற்பட்ட வீரர்களை தேராயமாக இந்த பணியில் ஈடுபடுத்துகிறது. 

பிற நாடுகளின் அதிபர் வரும் போது எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பது வழக்கமான நெறிமுறைதான்” என்று மத்திய இணை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் ஊடுருவல் முய்ற்சிகள் தினமும் நடைபெறுவதாகவும், கடுமையான பனிமூட்டமும் குளிரும் பாதுகாப்பு படையினருக்கு இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு கடும் சவால் அளிப்பாதவும் தகவல்கள் கூறுகின்றன. 

மூன்று தினங்களுக்கு முன் கிடைத்த சில தகவல்கள் மூலம்  லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாத அமைப்பு இந்தியாவில் மிகப்பெரும் தாக்குதலை நடத்த சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக எல்லையில் பாதுகாப்பு படை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive