Tuesday 20 January 2015

மெரினாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ-மாணவிகள் பங்கேற்பு

சென்னை

போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

26-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் இந்த ஆண்டு கடந்த 11-ந் தேதி முதல் 21-ந் தேதி (நாளை) வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பி.தாமரைக்கண்ணன் ஆலோசனை பேரில், சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா கடற்கரை களங்கரை விளக்கம் அருகில் இருந்து விவேகானந்தர் இல்லம் வரையில், ராணி மேரி கல்லூரி மாணவிகள் மற்றும் சென்ட் பீட்ஸ் பள்ளி மாணவர்கள் என சுமார் 2,500 பேர் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை ராணி மேரி கல்லூரி முதல்வர் அக்தர் பேகம், போக்குவரத்து துணை கமிஷனர் (கிழக்கு) எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பேரணியில், கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி, கோஷங்கள் எழுப்பி சென்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive