Monday 19 January 2015

ஆர்.எஸ்.எஸ் பள்ளிக்கு செல்லும் முஸ்லிம் மாணவர்கள் மதரஸாவுக்கு செல்லும் இந்து மாணவர்கள்

ராம்பூரில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் இந்து பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் மாணவர்களுக்கு சமஸ்கிருதம்,உருது ஆகிய பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கபட்டு வருகிறது.

இதில் இந்து மாணவர்கள் சுமார் 11 பேரும் முஸ்லிம் மாணவர்கள் சுமார் 140 பேரும் இப்பள்ளியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இது குறித்து முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில் நாங்கள் உருது மொழியை நேசிப்பவர்கள் ஆனாலும் சமஸ்கிருதத்தை மத வேறுபாடுகளை களைந்து இந்து பாரம்பரியத்தை கற்றுகொள்ள முஸ்லிம் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில்

நாங்கள் உருது மொழியை விரும்புகிறோம்.உருது மொழியில் உள்ள பாடல்களை நாங்களும் படித்து வருகிறோம்.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களும் நீண்ட காலமாக பாரம்பரிய பழக்க வழக்கங்கள்.கலாச்சாரங்கள் நிலவி வருகின்றனது. என்று தெரிவித்தனர்.

இது குறித்து மதரஸாவின் தலைமையாசிரியர் சமீத்துல் அன்சாரி கூறுகையில் இந்து மாணவர்கள் 11 பேர் வகுப்பில் நுழைந்தவுடன் அனைத்து பாடங்களும் படிக்கின்றனர். இந்து மாணவர்கள் உருது மொழியை விருப்பபாடமாக எடுத்து பயில்கின்றனர்.

இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவர்களும் காலையில் ஒன்றாக பள்ளியில் பிரார்தனையில் ஈடுபடுகின்றனர்.
ஆர் எஸ்.எஸ் பள்ளியில் படிக்கும் 140 முஸ்லிம் மாணவர்கள் காலையில் வகுப்பு தொடங்கும் முன் சூரிய நமஸ்காரம்,வேத மந்திரங்கள் ஓதி வகுப்பை தொடங்கின்றனர். இந்துத்வா வழிமுறையை பின்பற்று கின்றனர்

இந்த பள்ளியில் படித்து முடித்து விட்டு துபாய் மற்றும் அரபு நாடுகளுக்கு செல்லும் முஸ்லிம் மாணவர்கள் நல்ல அறிவும், நல்ல வேலையும் கிடைத்துள்ளதாக  தெரிவித்துள்ளனர் என்றும், முஸ்லிம் மாணவர்களும்,இந்து மாணவர்களும் பல்வேறு இடங்களில் நல்ல நிலையில் உள்ளதாக அப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive