Monday 19 January 2015

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல கொடையாளருக்கு மார்ட்டின் லூதர் கிங் விருது வழங்கப்பட்டது

இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல கொடையாளருக்கு மார்ட்டின் லூதர் கிங் விருது வழங்கப்பட்டதுவாஷிங்டன், ஜன.19-

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பல்வேறு தர்ம காரியங்களை செய்து வரும் இந்திய வம்சாவளி கொடையாளரான பிராங் இஸ்லாம் என்பவருக்கு அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைக்காக போராடிய சமூக சேவகர் மார்ட்டின் லூதர் கிங் நினைவு விருது வழங்கப்பட்டது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அசாம்கர் பகுதியைச் சேர்ந்த பிராங்க் இஸ்லாம், தனது தந்தையுடன் 15 வயது சிறுவனாக அமெரிக்கா சென்றார். வெறும் 500 டாலர்கள் முதலீட்டில் தனியாக தொழில் தொடங்கிய அவர், நொடிந்துப் போய் நஷ்டத்தில் இயங்கிவந்த ஒரு தகவல் தொழில்நுட்பத்துறை தொடர்பான நிறுவனத்தை விலைக்கு வாங்கி தனது தனித்திறமையினாலும், அயராத உழைப்பினாலும் அதை முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக மாற்றினார்.

பின்னர், அந்த நிறுவனத்தை பல மடங்கு லாபத்துடன் நல்ல விலைக்கு விற்றுவிட்ட பிராங்க் இஸ்லாம், அந்தப் பணத்தை கொண்டு இந்தியா மற்றும் அமெரிக்காவில் பல்வேறு தர்ம காரியங்களை செய்து வருகிறார். தர்ம காரியங்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக தனது வீட்டையும் பணம் வசூலிக்காமல் இவர் இலவசமாக ஒதுக்கி தருகிறார்.

இவரது இந்த பொதுச் சேவையையும், கொடைக் குணத்தையும் பாராட்டிப் போற்றும் வகையில் அமெரிக்க அதிபர் ஆண்டுதோறும் அறிவிக்கும் மார்ட்டின் லூதர் கிங் நினைவு விருது நேற்று இவருக்கு வழங்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive