Monday 19 January 2015

பறவைக் காய்ச்சல் பீதியால் முடப்பட்ட சுக்னா ஏரி இன்று திறக்கப்பட்டது

பறவைக் காய்ச்சல் பீதியால் முடப்பட்ட சுக்னா ஏரி இன்று திறக்கப்பட்டதுசண்டிகர், ஜன.19-

சண்டிகரின் சுக்னா ஏரி அப்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பிரபலமான இடமாகும். 250 வாத்துகள் இருக்கும் அந்த ஏரியில் கடந்த டிசம்பர் மாதம் 30 வாத்துகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. முதலில் உணவு நச்சு, அதிக உணவு காரணமாக வாத்துகள் இறந்திருக்கலாம் என்று நினைத்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனையின் முடிவு எச்5என்1 வைரஸ் பாசிட்டிவ் (பறவைக் காய்ச்சல்) என்று வந்ததையடுத்து பறவைக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் இருப்பதால் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சுக்னா ஏரி மூடப்பட்டது.

இந்நிலையில் ஏரி விரைவில் திறக்கப்படும் என்று விலங்குகள் நோய் உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனம் சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று பொதுமக்கள் பார்வைக்கு ஏரி திறக்கப்பட்டது.

ஏரியில் உள்ள தண்ணீரை சோதனை செய்தாகவும் அதில் பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் கிருமிகள் இல்லாதது உறுதி செய்யப்பட்ட பிறகே ஏரியை திறக்க முடிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏரி திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகளும், காலையில் அந்த ஏரி அருகே வாக்கிங் செல்பவர்களும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive