Tuesday 20 January 2015

அருண் ஜெட்லி-ஜெயலலிதா சந்திப்பு ஏற்கத்தக்கது அல்ல: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கருத்து

சென்னை, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்திருப்பது நியாயமான சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது. அருண் ஜெட்லியை சந்தித்த பிறகு வருமான வரி வழக்கில் வரியை கட்டிவிட்டு தண்டனையின்றி வெளிவர முடிந்திருக்கிறது என்பதும், பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத், ஜெயலலிதாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் என்பதை கணக்கில் கொண்டு பார்க்கிறபோது வெளித்தெரியாத உடன்பாட்டிற்காகவே அருண் ஜெட்லி, ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறார் என்று பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தவறு என்று கூற முடியாது.

அருண் ஜெட்லி இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். இத்தகைய தவறான உள்நோக்கம் கொண்ட சந்திப்பு ஏற்கத்தக்கதல்ல என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive