Monday 19 January 2015

கழுகுபார்வை கொண்ட வெளிநாட்டு கொள்கையை இந்தியா பின்பற்ற தேவையில்லை; ரிஜ்ஜூ

புதுடெல்லி,

அமைதியின் சின்னமான இந்தியா, கழுகுபார்வையுடனான வெளிநாட்டு கொள்கையை பின்பற்ற தேவையில்லை என்று மத்திய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார். 

தேசிய புலனாய்வு அமைப்பின் தொடக்கநாள் விழா, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உள்துறை இணைஅமைச்சர் கிரண் ரிஜ்ஜூ "இந்தியாவுடைய எண்ணம், அமைதியின் சின்னமாகும். கழுகுபார்வையுடனான வெளிநாட்டு கொள்கையை பின்பற்ற இங்கு தேவையில்லை. நாம் இயல்பாகவே ஒரு மென்மையான பலம் கொண்டவர்கள். மென்மை என்பது பலவீனம் என்று பொருள் இல்லை. நம்முடைய தீர்வுக்கு, நாம் உறுதியாகவும், வலிமையாகவும் இருக்க வேண்டும்," என்று கூறினார்.எல்லையில் இந்திய நிலைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும், பாகிஸ்தானுக்கு இந்தியா தக்கபதிலடி கொடுக்கும் என்று ராஜ்நாத் சிங் தெளிவாக கூறியநிலையில் ரிஜ்ஜூ தனது இக்கருத்தை தெளிவுபட தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடைய அடிப்படை நடத்தை என்பது மிகவும் மென்மையானதே, அண்டைய நாடுகளுடன் கழுகுபார்வையுடனான வெளிநாட்டு கொள்கையை பின்பற்றாது என்று கிரண் ரிஜ்ஜூ கூறினார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive