Wednesday 21 January 2015

கதை திருட்டு;பிகே பட தயாரிப்பாளர் மீது எழுத்தாளர் வழக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்

புதுடெல்லி,

கதை திருடப்பட்டுள்ளது என்று எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிக்க கோரி பிகே பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் ஆமீர் கான் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள பிகே திரைப்படம்  உலகம் முழுவது வசூலில் ரூ.642 கோடியை குவித்துள்ளது.  இந்தியாவில் வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த படம் பிகே என்று அதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த டிசம்பர் 19-ந்தேதி வெளியான பிகே திரைப்படம் 5-வது ஞாயிற்று கிழமை அன்று உலகம் முழுவது 642 கோடி வசூல் செய்து சாத்னை செய்து உள்ளது.  பல படங்களின்  முந்தைய சாதனையை பிகே திரைப்படம் முறியடித்து உள்ளது.

 சாதனைகளை முறியடித்து பிகே பட்ம் ஓடி கொண்டு இருந்தாலும் அவ்வப்போது அந்த படம் தொடர்பாக ஏதாவது பிரச்சினை எழத்தான் செய்கின்றது

முதலில்  பட  போஸ்டரில் ஆபாசம் என   ஆரம்பித்த இந்த பிரச்சினை தறபோது வரை தீரவில்லை

 படம் வெளியிடப்பட்டபோது திரையரங்குகளுக்கு தீ வைப்பு சம்பவமும் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வழக்குகளும் தொடரப்பட்டது. படம் தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவருகிறது.

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'பாரிஷ்தா' இந்தி புக்கின் குறிப்பிட்ட பகுதியை காப்பியடித்து, பிகே படம் எடுக்கப்பட்டுள்ளது என்று எழுத்தாளர் கபில் இஷாபுரி வழக்கு தொடுத்துள்ளார். 

எழுத்தாளர் கபில் இஷாபுரி,தயாரிப்பு நிறுவனம்  பட இயக்குனர், வசனம் எழுதியவர் ஆகியோர் தனது புத்தகத்தின் எழுத்துக்கள், வெளியிடப்பட்ட கருத்துக்கள் மற்றும் காட்சிகளை திருடிவிட்டனர். என்று குற்றம் சாட்டியுள்ளார். தயாரிப்பாளர்களிடம் இருந்து ரூ.1 கோடி பெற்றுதர வேண்டும் என்று எழுத்தாளர் கபில் இஷாபுரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பதில்அளிக்க வேண்டும் என்று பிகே படத்தின் தயாரிப்பாளர்  வினோத் சோப்ரா, இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள், வசனம் எழுதியவர் அபிஜாத் ஜோஷி ஆகியோர் வருகிற ஏப்ரல் 16-ம் தேதி, இதுதொடர்பான ஆதாரங்களை பதிவுசெய்ய ஐகோர்ட்டு கூட்டு பதிவாளர் முன்பு ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர்கள் (பட தயாரிப்பாளர்கள்) என்ன கூற விரும்புகிறார்களோ அதனை கூட்டு பதிவாளர் முன்னதாக தெரிவிக்கலாம்." என்று நீதிபதி கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive