Tuesday 20 January 2015

ஆவின்பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்

ஆவின்பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்

விழுப்புரம், ஜன.20–
ஆவின் பால் கலப்பட வழக்கில் சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதானவர்கள் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். வைத்தியநாதனை தவிர 18 பேர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். வைத்தியநாதன் ஜாமீன் கேட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் 5 முறை மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே ஜாமீன் கிடைக்காமல் 120 நாட்களுக்கு மேலாக கடலூர் ஜெயிலில் அவர் உள்ளார்.
நேற்று அவரது காவல் முடிவடைந்தது. ஆனால் நேற்று ஆற்று திருவிழா பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றுவிட்டதால் அவரை விழுப்புரம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தவில்லை. இது தொடர்பாக சிறை துறை சார்பில் கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி முகிலாம்பிகை அந்த மனுவை ஏற்றுக்கொண்டு வைத்தியநாதனை இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்துமாறு உத்தர விட்டார்.
அதன்படி இன்று மதியம் கடலூர் ஜெயிலிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் வேனில் விழுப்புரம் கோர்ட்டுக்கு வைத்தியநாதன் கொண்டு வரப்பட்டார். நீதிபதி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive