Tuesday 20 January 2015

உயரழுத்த மின்சாரத்தில் சிக்கிய வாலிபரை காப்பாற்றிய சிறுவனுக்கு மத்திய அரசின் வீரதீர விருது

உயரழுத்த மின்சாரத்தில் சிக்கிய வாலிபரை காப்பாற்றிய சிறுவனுக்கு மத்திய அரசின் வீரதீர விருதுஇட்டாநகர், ஜன.20-

தனது உயிரை துச்சமாக மதித்து 33 கிலோவாட் சக்தி கொண்ட மின்கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய வாலிபரை காப்பாற்றிய 14 வயது சிறுவன் மத்திய அரசின் வீரதீர விருதுக்கு தேவு செய்யப்பட்டுள்ளான்.

அருணாசலப்பிரதேசம் மாநிலம், லோயர் டெபாங் சமவெளி மாவட்டத்தை சேர்ந்த மிலு மெகா(24) என்பவர் கடந்த நவம்பர் மாதம் தனது வீட்டின் வழியாக நடந்து சென்றபோது, உயிரோட்டமான 33 கிலோவாட் சக்தி கொண்ட உயரழுத்த மின்சார கம்பியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

இதை அவ்வழியே சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனான ருமோ மெட்டோ என்ற 14 வயது சிறுவன் கவனித்து விட்டான். தனது உறவினரான மிலு மெகா மின்சாரத்தில் சிக்கி துடிப்பதை பார்த்து பதறியடித்து ஓடி விடாமல் அவரை நெருங்கி, மின்சாரத்தின் பிடியில் இருந்து மீட்டான்.

உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற மிலு மெகா உடல்நிலை தேறி இப்போது நலமாக உள்ளார். இந்நிலையில், ஆண்டுதோறும் குடியரசு தினத்தனறு ஜனாதிபதி வழங்கும் சிறுவர்-சிறுமியருக்கான வீரதீர விருதுக்கு தனது உயிரை துச்சமாக மதித்து அவரை பிடித்து இழுத்து காப்பாற்றிய ருமோ மெட்டோவின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிடும் ருமோ மெட்டோ, 'இந்த விருது எனது வாழ்நாள் முழுவதும் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உழைக்கும் ஊக்கசக்தியை எனக்கு அளிக்கும்' என கூறியுள்ளான்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive