Monday 19 January 2015

முசாபர் நகர் பள்ளியில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு 19 வயது மாணவர் தற்கொலை

முசாபர் நகர் பள்ளியில் பயங்கரம்: துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு 19 வயது மாணவர் தற்கொலைலக்னோ, ஜன.19-

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று பள்ளி மைதானத்தில் 19 வயது மாணவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்நகர் மாவட்டம், புது மண்டி பகுதியில் உள்ள பஞ்சேன்டா கிராமத்தைச் சேர்ந்த துஷார்(19) என்ற மாணவன் இதே பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பில் படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்கு வந்த துஷார், அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் புத்தகப் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து, தலையில் சுட்டுக் கொண்டான்.

ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவனை ஆசிரியர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், வரும் வழியிலேயே துஷாரின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபரீத முடிவை துஷார் மேற்கொள்ள என்ன காரணம்? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive