Sunday 18 January 2015

விமானநிலையங்களை தனியார்மயமாக்கினால் வேலைநிறுத்தம் ஊழியர் சங்கம் எச்சரிக்கை

புதுடெல்லி, 

இந்தியாவில் உள்ள சென்னை உள்ளிட்ட 6 விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக உலகளாவிய டெண்டரும் விடப்பட்டது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

தற்போது பாரதீய ஜனதா அரசும் விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தனியாரிடம் ஒப்படைத்தால் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று விமானநிலைய ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி அசோக் கஜபதி ராஜூவுக்கு ஊழியர் சங்கம் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. அதில், சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஆமதாபாத் ஆகிய விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இதுவிஷயத்தில் அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் பொது வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம். தனியாரிடம் ஒப்படைப்பதால் ஊழியர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்’ என்று கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive