Wednesday 21 January 2015

ரூ.14¾ லட்சம் மதிப்பில் வேளாண் எந்திரங்கள் கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 11 விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.14 லட்சத்து 73 ஆயிரத்து 827 மதிப்பிலான வேளாண் எந்திரங்களை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார்.

வேளாண் எந்திரங்கள்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 11 விவசாயிகளுக்கு ரூ.14 லட்சத்து 73 ஆயிரத்து 827 மதிப்பிலான வேளாண் எந்திரங்களை கலெக்டர் சரவணவேல்ராஜ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மானிய தொகை

வேளாண் பொறியியல் துறையின் சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2014-2015 ன் கீழ், 8 விவசாயிகளுக்கு உழவு எந்திரங்களையும், 3 விவசாயிகளுக்கு சுழல் கலப்பைகளையும்(ரோட்டோவேட்டர்) வழங்கப்பட்டுள்ளது. இதில் உழவு எந்திரத்தின் மொத்த தொகை ரூ.12 லட்சத்து 1,327 ரூபாயும், விவசாயிகளின் பங்களிப்பு தொகை ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 517 ஆகும். இவற்றில் ரூ.5 லட்சத்து 48 ஆயிரத்து 810 ரூபாய் அரசு மானியமாக வழங்கப்படுகிறது.

இதேபோல் சுழல்கலப்பை கருவியின் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 500 ரூபாயும், விவசாயியின் பங்களிப்புத்தொகை ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 250 ரூபாயும், அவற்றில் ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 250 ரூபாய் அரசு மானியத் தொகையாக வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.

இ¢ந்த நிகழ்ச்சியில் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ஆரோக்கியசாமி, உதவி செயற்பொறியாளர்கள் மோகனகிருஷ்ணன், நெடுமாறன், ரெங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive