Monday 19 January 2015

பா.ஜனதா கட்சியில் இணைந்தார் கிருஷ்ணா தீரத்

பா.ஜனதா கட்சியில் இணைந்தார் கிருஷ்ணா தீரத்புதுடெல்லி, ஜன. 19-

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக பதவி வகித்தவருமான கிருஷ்ணா தீரத் (வயது 59) இன்று பா.ஜனதாவில் இணைந்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மந்திரியாக பதவி வகித்த தீரத் இன்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். அவருக்கு அமித் ஷா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது டெல்லி பா.ஜனதா தலைவர் சதீஷ் உபாத்யாய் உடனிருந்தார். தீரத் வருகையை பா.ஜனதா தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

டெல்லி சட்டப்பேரவை உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய தீரத், 1984 முதல் 2004 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1998-ல் சமூக நலத்துறை மந்திரியாக பதவி வகித்தார். வடக்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினராக 2004-ம் ஆண்டு முதல் 2014 வரை பதவி வகித்தார்.

பா.ஜனதா கட்சியில் இணைந்த பின்னர் நிருபர்களை சந்தித்த கிருஷ்ணா தீரத், மக்களுக்காக சேவை செய்வதற்காக அமித் ஷா வை சந்தித்ததாகவும், இந்த நோக்கத்திற்காக இங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பாரதீய ஜனதாவில் அவரது பங்களிப்பு குறித்து கேட்டபோது, அதுபற்றி கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும் என்றும் தனது பங்களிப்பு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் இருக்கும் எனவும் தீரத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive